MUTHUSOM
CSS Drop Down Menu

கதிரவன் கதிர் 7 வெளியீட்டுவிழா - 2011

கதிரவன் கலைக் கழகம் வெளியிடும் கதிரவன் கல்வி இலக்கியக் கலைச் சஞ்சிகை கதிர் 7 வெளியீட்டுவிழா 03.04.2011 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகாவித்தியாலயத்தில் திரு.த.இன்பராசா தலைமையில் நடைபெற்றது. இவ் விழாவிற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி,புனர்வாழ்வு.மீள்குடியேற்றம் கிராமிய அபிவிருத்தி,சுற்றுலா மற்றும் சுற்றாடல் துறைச் செயலாளர் கலாநிதி.சி.அமலநாதன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்புத் தமிழ்ச்சங்கத் தலைவர் பேராசிரியர்.திரு மா .செல்வராசா,மட்டக்களப்பின் மூத்த எழுத்தாளர் திரு இரா.நாகலிங்கம் (அன்புமணி),முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாண கலாசாரப் பணிப்பாளர் திரு.செ.எதிர்மன்னசிங்கம், செங்கதிர் ஆசிரியர் திரு.த.கோபாலகிருஸ்ணன்(செங்கதிரோன்), மட்டக்களப்பு வர்தக கைத்தொழில், விவசாயச் சம்மேளனத் தலைவர் திரு.வி.றஞ்சிதமூர்த்தி, எழுத்தாளர் ஊக்குவிப்பு மைய மேலாளர் திரு.ஓ.கே.குணநாதன், கலாபூஷணம் ஆ.மு.சி.வேலழகன் மற்றும் ஓய்வு பெற்ற அதிபர் திரு.செ.தபராசா ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்

கெளரவ அதிதிகளாக கவிஞர் நிலாதமிழின் தாசன், மண்ரூர் அசோகா, கவிஞர் தேனூரான், திருமதி.சுந்தரமதி வேதநாயகம்,
ஆரையூர்த்தாமரை , மண்முனைப்பற்று கலாசார உத்தியோகத்தர் திரு.செ.சோமசுந்தரம்,மண்முனைப்பற்று இளைஞர் சேவை அதிகாரி. திருமதி.பிரசாந்தி பிரியதர்ஷன், கிராம அதிகாரிகளான திரு.த.த.தயாபரம்,திரு.செ.டிரக்ஷ்ன் ,திருமதி.தயனி கிருஷ்ணாகரன் இவர்களுடன் புதுக்குடியிருப்பு ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு.மா.சதாவிவம், மட்-புதுக்குடியிருப்புக் கண்ணகி மகா வித்தியாலய அதிபர் திரு.வே.தட்சணாமூர்த்தி மற்றும் சமாதான நீதிவான் திரு.பொன்னையா. சின்னத்தம்பி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

மரபுரீதியான ஆரம்ப நிழ்வுகளான வரவேற்பு மங்கலவிளக்கேற்றல் இறைவணக்கம், தமிழ் மொழிவாழ்த்து என்பவற்றைத் தொடர்ந்து திரு.சி.புவனேந்திரன் அவர்களால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரு.த.அன்பராசா அவர்களால் தலைமையுரையும் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது முதல் பிரதியினை திரு.சி.அமலநாதன் அவர்கள் திரு.மா.செல்வராசா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து கவிஞன் சிற்றிதழ் ஓராண்டு நிறைவையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டிக்கான பரிசில்கள் வழங்கும் நிகழ்வும் கதிரவன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கலும் திரு.தயாபரம் அவர்களுக்கான கெளரவிப்ப நிகழ்வும் சிறப்புரைகள் மற்றும் பிரதம அதிதிகள் உரையும் அதனைத் தொடர்ந்து கவிஞன் ஆசிரியர் திரு.ச.மதன் அவர்களிக் நன்றியுரையுடனும் விழா இனிதே நிறைவு பெற்றது
------------------------------------------------------------------------------------------------

நிகழ்வுகளின் நிழல்கள்
----------------------------
























About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...