
மண்முனைப்பற்று மதுபான சாலைகளின் மாநகரமா?
மண்முனைப்பற்று வாழ் பொதுமக்களே....!
எமது பிரதேசத்தில் 5 மதுபாணசாலைகள் இருப்பது தாங்கள் அறிந்த விடயம் மண்முனைப்பற்றை வரவேற்க ஒன்று புதுக்குடியிருப்பு ஆரம்பத்தில் ஒன்று மன்முனைதுர்ரைக்கு
செல்லும் வழியில் ஒன்று ஆரையம்பதியில் இரண்டு.
இன்னுமொன்று........
புதுக்குடியிருப்பு - வேடர்குடியிருப்பு பகுதிக்கு இடைப்பட்ட முடக்கடியில் புதிதாக அமைக்கப்பட்ட மதுபானசாலை
சமூக நலன்விரும்பிகளே....!
எமது அயல் பிரதேசமான களுவாஞ்சிக்குடிப் பிரதேசம் மண்முனைப்பற்று பிரதேசத்தை விட 3 மடங்கு பெரிய நிலப்பரப்பையும் அதிகமான சனத்தொகையினையும் கொண்டமைந்தது.ஆனால் அங்கு 2 மதுபானசாலைகளே இருக்கின்றன.
கிட்டத்தட்ட 9500 குடும்பங்களையும் 32 000 அங்கத்தவர்களையும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவையும் கொண்டுள்ள மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் 6 மதுபான சாலைகள் வேண்டுமா? பொதுமக்களே தீர்மானியுங்கள்....!
மண்முனைப்பற்றுப் பிரதேச செயலாளரே.....!
வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் காரியத்திற்கு துணைபோக வேண்டாம்! எமது மக்கள் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மதுபாவனையால் ஒரு கிராமசேவையாளர் பிரிவில் சராசரியாக 25 பேர்வரை கணவன் விட்டுச்சென்ற பெண்கள் வாழ்கின்றார்கள். நாளாந்தம் மதுவுக்கு அடிமையாகி சமூக, பொருளாதார, கலாசார சீரழிவுகள் அதிகரித்த வண்ணமே உள்ளது. இவ்வாறான நிலைமையில் இன்னுமோர் மதுபானசாலைக்கு அனுமதி வழங்கி வரலாற்றுத் துரோகத்தை இளைக்காதீர் எமது பிரதேச மாணவர்களின் கல்விச் சீரழிவுக்கு வித்திடாதீர்கள்! இது பிரதேச மக்களின் அன்பான வேண்டுகோள்!
சமூக சேவை அமைப்புக்களே....!
மதுவை ஒளிப்போம் எனும் வாசகத்தை விட்டு மதுபான சாலைகள், கிராமம்தோறும் காணப்படும் மினி வார்கள் என்பவற்றை இல்லாதொழிப்போம்!
ஒன்று சேருங்கள்! உங்கள் எதிர்ப்பைத் தெரிவியுங்கள்! கண்டனங்களை வெளியிடுங்கள்!
அரசாங்கத்திற்கும், அரசியலவாதிகளுக்கும், அரச அதிகாரிகளுக்கும் எமது நிலைரமயை எடுத்துக்கூறுங்கள்.
என மண்முனைப்பற்றுப் பிரதேசத்தில் ஒரு பகிரங்க மடலாக துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகியுள்ளது
சிந்திக்கவேண்டிய ஒன்றும் கூட.....
facebook
twitter
google+
fb share