
இச் சம்பவத்தில் அம்பியூலன்ஸ் சாரதி நடந்து கொண்ட விதம் பற்றிய சிந்தனை என்மனதில் இப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அது ஒருபுறமிருக்க. இவர்கூறிய பதில் எந்தளவு ஏறறுக்கொள்ளக்கூடியது என்பது நீங்கள் தீர்மானிக்க வேண்டிது. மது அருந்தியிருப்பவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றுவது சட்டத்திற்கு முரணானதா? எனும் கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கு நின்ற அனைவரின் மனதிலும் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.
அதே நேரம் அந்த அம்பியூலன்ஸ் சாரதி களுதாவளை பிள்ளையார் கோயிலில் நின்று வணங்கியது குறிப்பிடத்தக்கது. (களுதாவளைப் பிள்ளையார், விபத்து வந்தால் நிற்காமல் பே என்று சொல்லியிருப்பாரோ?) இந்த சாரதியின் மனப்பாங்கு.......... நல்ல மனப்பாங்குள்ள அனைத்து அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கும் ஒரு இழுக்கை ஏற்படுத்தும் என்பதிலும் பார்க்க அனைத்துச் சாரதிகளும் இவ்வாறானவர்கள் தானா எனவும் சிந்திக்க வைக்கிறது. சட்டம் ஒருபுறமிருக்க சாரதியின் மனிதாபிமானம் எங்கு சென்றது. இவ்வாறானவர்களை இந்த இடத்தில் மிருகத்தனம் கொண்டவர்கள் என்று கூறினால் மிருகங்கள் கூட அதை ஏற்றுக்கொள்ளுமா? டொல்பின் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பதல்லவா?
(விபத்து நடந்தும் அவரைச் சுற்றி நிறையப் பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டும் துக்குவதற்கு ஆளில்லாமல் நின்ற எம்மவரின் குறுகிய மனோநிலையை தோற்கடித்தது சாரதியின் பதிலும் நடவடிக்கையும்)
facebook
twitter
google+
fb share