ஆரம்பக்கல்வியை அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணவித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியை மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்திலும் நிறைவேற்றி பேராதனைப்பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் இயந்திரவியல் பொறியியலாளராகப் பட்டம் பெறறு, இலங்கைப் பொறியியலாளர்கள் நிறுவகத்தின் பட்டயப்பொறியியலாளராகவும், இலங்கை தன்னியக்க வாகனப் பொறியியலாளர் நிறுவகத்தின் உறுப்பினராகவும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.
1967ம் ஆண்டு சிவானந்த வித்தியாலயத்தில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும்போது பாடசாலையில் நடைபெற்ற கவிதைப்போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற ''நான் விபுலானந்தனுக்கு நான் விடுத்த ஓலை"" எனும் கவிதைமூலம் கவியுலகில் காலடி வைத்த இவரை கிழக்கிலங்கையின் கவிச்சக்கரவர்த்தியாகவிருந்த நீலாவணன் அவர்களின் பிரசன்னமும் விமர்சனமும் இவருக்குக் கவிபாட ஊக்கம் கொடுததிருந்தன.
தமிழில் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் கவிதை யாக்கும் இவர் கவிதைத் துறையில் மட்டுமன்றி நாடகம் வில்லுப்பாட்டு சங்கீதம் போன்ற துறைகளிலும் ஈடுபடுகின்றார்.
facebook
twitter
google+
fb share