MUTHUSOM
CSS Drop Down Menu

சர்வதேச மகளீர் தினம் இன்றாகும்

சர்வதேச பெண்கள் தினம் 2011 மார்ச் 8
இந்த வருடம் சர்வதேச பெண்கள் தினம் பயிற்சி மற்றும் விஞ்ஞான தொழில்நுட்பத்தை சமமாக அணுகுதல்,பெண்கள் கண்ணியமான தொழிலைப் பெற்றக்கொள்வதற்கான வழி எனும் கருப்பொருளுடன் மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தினரால் கொண்டாடப்பட்டது.

சர்
வதேச பெண்கள் தின வரலாறு

1857ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி நியூயோக் நகரின் ஆடைத் தொழிற்சாலையில் வேலை செய்யூம் பெண்கள் தங்களுக்கான உரிமைகளை முன்வைத்து போராட்டம் ஒன்றை நடத்தினர் . 8 மணித்தியாலய , நியாயமான , வேலை செய்யம் இடத்தில் தொழிளாளர்களுக்கான வசதிகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய போராட்டத்தின் பின் விளைவுகளில் ஒன்றே இன்று நாம் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடி வருகின்றோம்.
இப் போராட்டத்தின் பின் இப் போராட்டம் உலகின் கவனத்தை ஈரர்த்தது. காரணம் பெண்கள் தங்களுக்கான தேவைகளை யாராவது சொல்வர், யாராவது செய்வர் என பழகிப்போன நிலைகளில் இருந்து தங்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொள்ள தாங்களே ஓழுங்கு செய்து நடத்தியமையாகும்.
இதனைத் தொடர்ந்து 1910 ம் ஆண்டு கொப்பன்ஹேகன் நகரில் நடைபெற்ற சர்வதேச சோசலிச பெண்களின் 2வது மாநாட்டில் மார்ச் 8ம் திகதி பெண்கள் தினமாக அனுஸஸ்டிக்க வேண்டுமென பிரேரித்தனர். இது மாநாட்டில் பங்கு பற்றியவர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின் 1911ம் ஆண்டு முதல் உலகெங்கிலும் உள்ள பெண்கள் அமைப்புக்களாலும் தொடர்ந்து சமூகத்தின் அனைத்து பொறுப்பு வாய்ந்த தரப்பினராலும் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

-விஜயலக்ஸ்மி-
மட்டக்களப்பு

About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...