MUTHUSOM
CSS Drop Down Menu
'பெண்களால் முடியும்'
எங்கள் எல்லோராலும் முடியும்
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011
சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
'முடியும்' இதுவே உலகின் முழு மூச்சாகும். ஒவ்வொரு மானுடத்தின் உயிர்த் துடிப்பும் இதுவே. கடந்த காலங்களில் எமக்கான பாதைகள் பல்வேறு காரணங்களின் நிமித்தம் மாற்றப்பட்டன,மறுதலிக்கப்பட்டன, தடைப்பட்டன. எனினும் பெண்கள் நாம் சோர்ந்து விடவில்லை..எமது முயற்சிகள் முண்டியடித்தன..முன்னேறின..,முயற்சிகளின் முன்னேற்றம் கண்டு எமது கரங்களுடன் பல கரங்கள் இணைந்தன... பேசின. இதன் மூலம் சமத்துவத்தின், சமாதானத்தின் நிழல் எம் ஒவ்வொருவரிலும் இன்று படியத் தொடங்கியுள்ளது. எனினும் கிடைத்த நிழல் ஓரங்களில் நாம் கண்மூடிக் காலம் கடத்தி கனவுக்குள் அறுவடை செய்ய இனி; எப்போதும் தயாராய் இல்லை. கிடைத்த விதைகள் மரமாக, தொடர்ந்து எம் பாதைகள் விரிவாக எங்கள் பயணம் தொடரட்டும்.
இதன் ஒரு நிகழ்வாக சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையமானது பெண்களின் சைக்கிள் பவனி ஒன்றினை 'லேடி மன்னிங் டிறைவ்' வீதியூடாக அனைவரதும் எதிர்பார்ப்புடனும் ஆதரவுடனும் மட்டக்களப்பு நகரின் காந்தி சதுக்கம் வரை நடத்தியது.

'மூடிக்கிடந்த கதவுகள் முற்றுகை தகர்ந்தன
தேடித் தேடி அலுத்த வாழ்வில் பாதை ஒன்று தெரியுது';

சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையம்
இல-55 லேடி மன்னிங் டிறைவ்
மட்டக்களப்பு
065 2223297

About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...