MUTHUSOM
CSS Drop Down Menu

தமிழியல் விருது 2010

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் வழங்கும் " தமிழியல் விருதூ2010" 27।பங்குனி 2011 அன்று மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் பேராசிரியர் துரைமனோகரன் (தலைவர் தமிழ்த் துறை பேராதனைப் பல்கலைக்கழகம்) தலைமையில் நடைபெறவுள்ளதுஇதில் சிறப்பு விருந்தினராக வவுனியூர்இராஉதயன் மற்றும் கவிஞர் சுமுரளிதரன் போன்றோரும் கெளரவ விருந்தினராக திருமிகுசுந்தரம் அருமைநாயகம் (அரசாங்க அதிகர் மட்டக்களப்பு) அவர்களும், பிரதம விருந்தினராக கெளரவ பாலேந்திரன் சசி மகேந்திரன் (மேல் நீதிமன்ற நீதிபதி, மட்டக்களப்பு கல்முனை) அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்இந்நிகழ்வுக்கு ச் சிறப்புரையாற்ற தமிழறிஞர் அகளங்கன் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்.

இந் நிகழ்வில் பின்வரும் துறைகளுக்காகப் பின்வருவோருக்கு விருதுகள் வளங்கப்படவுள்ளன।

உயர் தமிழியல் விருது

எழுத்தாளர் ஊக்குவிப்பு ஸ்தாபகர் பாக்கியநாதன் உயர் தமிழியல் விருது

  • பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி

தமிழியல் வித்தகர் பட்டம்

தமிழியல் வித்தகர் பட்டமும், தலா 15,000 ரூபாய் பொற்கிழியுடன் வவுனியூர் ஸ்ரீ இராமகிருஸ்ணா கமலநாயகி தமிழியல் விருதும்

  • டொமினிக் ஜீவா
  • அநு. வை. நாகராஜன்
  • சா. . கலலநாதன்
  • . பாலேஸ்வரி
  • அருணா செல்லத்துரை
  • ஆரையூர் நவம்
குழந்தை இலக்கியம்

பதிவாளர் நாயகம் எஸ். முத்துக்குமரன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10,000 பொற்கிழி

  • குடை நடை கடை - வசந்தி தயாபரன்

விடலை இலக்கியம்

கல்விமான் . முத்துலிங்கம் தமிழியல் விருதுடன் 10,000 ரூபாய் பொற்கிழி

  • உள்ளம் பெருங்கோயில் - கோகிலா மகேந்திரன்

கவிதை

புலவர்மணி ஆ. மு. சரீபுத்தீன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10,000 பொற்கிழி

  • கவிதையில் துடிக்கும் காலம் - மு. பொன்னம்பலம்

காவியம்

கவிஞர் கல்லாறன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி

  • நெருப்புக்கு இடையே நீந்தும் நிலாக்கள் - நிலா தமிழின்தாசன்


சிறுகதை

வித்தியாகீர்த்தி . சந்திரகுமார் தமிழியல் விருதுடன் ரூபாய் 10,000 பொற்கிழி

  • மனைவி மகாத்மியம் - சுதாராஜ்

நாவல்

நாவலாசிரியை பவளசுந்தரம்மா தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி

  • தெம்மாடுகள் - எஸ். ஏ. உதயன்
  • மக்கள்... மக்களால்... மக்களுக்காக - வி. ஜீவகுமாரன் (டென்மார்க்)
  • குறும்புக்கார ஆமையார் (சிறுவர் நாவல்) - ஓ.கே. குணநாதன்

நாடகம்

செந்தமிழ்ச்சல்வர் ஸ்ரீஸ்கந்தராஜா தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி

  • கங்கையின் மைந்தன் -அகளங்கள் ( நா.தர்மராஜன்)
நாட்டுக் கூத்து

கலைஞர் . கணகதிப்பிள்ளை தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி

  • கூத்துக்கள் ஐந்து - கலையார்வன் கு. இராயப்பு

மொழிபெயர்ப்பு

புரவலர் நளீம் ஹாஜியார் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி

  • பட்டுப்பூச்சியின் பின்னுகை போலும் - கெக்கிராவ சுலைஹா

வரலாறு

சிவநெறிப்புலவர் சீ.. இராமஸ்வாமி தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி

  • மருதமுனையின் வரலாறு - .மு. சரீபுத்தீன்

ஆய்வியல்

புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி

  • தேடலும் விமர்சனங்களும் - . ஜீவகாருண்யம்

புரவலர் . ஜெதீசன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி

  • அரசறிவியல் - வே. குணரத்தினம்

அறிவியல்

சுவாமி விபுலானந்தர் தமிழியல் விருதுடன், ரூபாய் 10000 பொற்கிழி

  • ஏழாவது ஊழி - பொ. ஐங்கரநேசன்

பழந்தமிழ் இலக்கியம்

பம்பைமடு நாகலிங்கம் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி

  • செந்தமிழ் வளம் பெற வழிகள் - . கனகரத்தினம்

இன நல்லுறவு இலக்கியம்

வண.பிதா சந்திரா அடிகளார் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி

  • பத்திற்கும் மேற்பட்ட இன நல்லுறவு நூல்களை எழுதியுள்ள - சிட்னி மாக்கஸ் டயஸ்

குறும்படம்

துறையூர் வே. நாகேந்திரன் தமிழியல் விருதுடன் ரூபாய் 10000 பொற்கிழி (இணைவிருது)

  • கிழக்கு வானம்
  • பள்ளிக்கூடம்

ஓவியம் / வடிவமைப்பு

ஓவியர் டாக்டர் சிக்கோ தமிழியல் விருதுடன் 5000 ரூபாய் பொற்கிழி

  • சுசிமன் நிர்மலவாசன்

பதிப்பகம்

புரவலர் எல். சோலைமலைத் தேவர் தமிழியல் விருதுடன் 50000 ரூபாய் பொற்கிழி

  • டேவிட் லிகோரி

About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...