MUTHUSOM
CSS Drop Down Menu

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் சாரதியின்(?) மனிதாபிமானமற்ற நடவடிக்கை சட்டரீதியானதா?

இன்று (03.04.2011) இரவு 7.30 அணியளவில் களுதாவளைப் பிரதேசத்தில் மட்டக்களப்பு கல்முனை வீதியில் விபத்தொன்று நிகழ்ந்திருந்தது. சுமார் 40 வயதுடைய நபரொருவர் விகத்துக்குள்ளாகியிருந்தார். அதே நேரம் அந்த வீதியால் மட்டக்களப்பு நோக்கி வந்த அம்பியூலன்ஸ் வாகனத்தைக் கண்டதும் நான் உட்பட அங்கு நின்ற அனைவரினதும் மனதில் ஒரு சிறிய மகிழ்ச்சி ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நிலைத்திருக்கவில்லை இதற்குக் காரணம் அந்த அம்பியூலன்ஸ் சாரதியிடமிருந்து வந்த "அவர் குடித்திருக்கிறார் அவரை நாங்கள் ஏற்ற முடியாது" என்ற பதிலே ஆகும். அதன் பின் அவரைப் பற்றி எந்த வொரு கரிசனையும் இல்லாதமல் அந்த இடத்தைவிட்டு சர்வ சாதாரணமாக ஓடி மறைந்தது அந்த அம்பியூலன்ஸ் வாகனம். அதன் பின்னர் சிறிது நேரத்தில் எதிர்த்திசையிலிருந்து வந்த தனியார் பேரூந்து ஒன்றில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலை நோக்கி அவரை அனுப்பியிருந்தோம்.

இச் சம்பவத்தில் அம்பியூலன்ஸ் சாரதி நடந்து கொண்ட விதம் பற்றிய சிந்தனை என்மனதில் இப்போதும் நிழலாடிக் கொண்டிருக்கிறது. அது ஒருபுறமிருக்க. இவர்கூறிய பதில் எந்தளவு ஏறறுக்கொள்ளக்கூடியது என்பது நீங்கள் தீர்மானிக்க வேண்டிது. மது அருந்தியிருப்பவர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றுவது சட்டத்திற்கு முரணானதா? எனும் கேள்வி எனக்கு மட்டுமல்ல அங்கு நின்ற அனைவரின் மனதிலும் ஏற்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.

அதே நேரம் அந்த அம்பியூலன்ஸ் சாரதி களுதாவளை பிள்ளையார் கோயிலில் நின்று வணங்கியது குறிப்பிடத்தக்கது. (களுதாவளைப் பிள்ளையார், விபத்து வந்தால் நிற்காமல் பே என்று சொல்லியிருப்பாரோ?) இந்த சாரதியின் மனப்பாங்கு.......... நல்ல மனப்பாங்குள்ள அனைத்து அம்பியூலன்ஸ் சாரதிகளுக்கும் ஒரு இழுக்கை ஏற்படுத்தும் என்பதிலும் பார்க்க அனைத்துச் சாரதிகளும் இவ்வாறானவர்கள் தானா எனவும் சிந்திக்க வைக்கிறது. சட்டம் ஒருபுறமிருக்க சாரதியின் மனிதாபிமானம் எங்கு சென்றது. இவ்வாறானவர்களை இந்த இடத்தில் மிருகத்தனம் கொண்டவர்கள் என்று கூறினால் மிருகங்கள் கூட அதை ஏற்றுக்கொள்ளுமா? டொல்பின் கடலில் தத்தளிப்பவர்களைக் காப்பதல்லவா?

(விபத்து நடந்தும் அவரைச் சுற்றி நிறையப் பேர் வேடிக்கை பார்த்துக் கொண்டும் துக்குவதற்கு ஆளில்லாமல் நின்ற எம்மவரின் குறுகிய மனோநிலையை தோற்கடித்தது சாரதியின் பதிலும் நடவடிக்கையும்)



About Mathan

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

'பெண்களால் முடியும்' எங்கள் எல்லோராலும் முடியும் சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8 2011 ...